Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலை; திருமா மீது நடவடிக்கை வேண்டும் : பெண்கள் அமைப்பு புகார்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (14:20 IST)
சுவாதி கொலை வழக்கில், விடுதலை சிறுத்தை கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன், குற்றவாளிக்கு ஆதராவாக பேசி வருகிறார் என்று பெண்கள் அமைப்பினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளனர்.


 

 
அதில் “சுவாதி கொலை தொடர்பாக, காவல்துறை அதிகாரிகளின் சீரிய முயற்சியால் ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மரணம் அடைந்த சுவாதியின் கண்ணியத்தையும், நற்பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.
 
மத பிரிவினைவாத குற்றங்களை தூண்டும் விதத்தில் ரம்ஜானுக்கு சுவாதி நோன்பு இருந்ததாக ஆதாரமில்லாத அவதூறுகளை கூறியுள்ளார். அவரது பேச்சுக்கள் சுவாதி கொலையில் கைதான ராம்குமாருக்கு மட்டுமின்றி பல குற்றவாளிகளுக்கும் ஆதரவாக இருக்கிறது.
 
இந்து-முஸ்லிம்களிடையே மத மோதல்களை உருவாக்கும் நோக்கத்துடன் உள்ளது. இது போன்று குற்றங்களை தூண்டி வரும் திருமாவளவன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிச்சடங்கு செய்த மறுநாள் உயிரோடு வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் ஒரு அதிசய சம்பவம்..!

ஆன்லைன் வகுப்பு தான்.. 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்ல வேண்டாம்: முதல்வர் உத்தரவு..!

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்பு..!

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments