Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எட்டு வழிச்சாலைக்கு தடைவிதிக்க முடியாது - நீதிமன்றம் மறுப்பு

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (11:25 IST)
எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 
மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.    
 
இந்த திட்டத்தினால் 1000 கிணறுகள், 100க்கும் மேற்பட்ட ஏரி, குளம் குட்டைகள் அழிக்கப்பட இருக்கிறது. மேலும், 20க்கும் மேற்பட்ட பள்ளிகள், கோவில்கள், 8 ஆயிரம் வீடுகள் இடிக்கப்பட இருக்கிறது. இந்த சாலைப் பணிக்காக 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் மற்றும் 500 ஏக்கர் வனப்பகுதியும் அழிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை எதிர்க்கும் சமுக ஆர்வர்கள்  மற்றும் விவசாயிகள் என அனைவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
 
இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளாமல் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என பாப்பிரெட்டியை சேர்ந்த பி.வி.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்து விட்டது. மேலும், கிருஷ்ணமூர்த்தியின் மனு மற்ற மனுக்களுடன் சேர்ந்து விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா வலைதளம் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு!

சூரியனுக்கு மிக அருகில்.. நாசாவின் விண்கலம் புதிய சாதனை!

விஜயகாந்த் நினைவிடத்திற்கு பேரணி.. அனுமதி மறுத்த காவல்துறை! - தேமுதிகவின் அடுத்த மூவ்!

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி… விஜயகாந்த் நினைவிடத்தில் மொட்டையடித்துக் கொண்ட ரசிகர்கள்!

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று..!

அடுத்த கட்டுரையில்
Show comments