Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரிலிருந்து துணை ராணுவம் சென்னை வருகை

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (14:22 IST)
தமிழகத்துக்கு பாதுகாப்பு படை அனுப்பி உதவ தயாராக இருப்பதாக உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு சற்றுமுன் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தற்போது பெங்களூரிலிருந்து மாலை 4 மணிக்கு துணை ராணுவம் சென்னை வருகிறது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமக உள்ளது. இதனால் அப்பல்லோ மருத்துவமனைக்கு காலை முதல் தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சூழ்நிலையை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ராஜிஜு, தமிழக அரசு விரும்பினால் மத்திய அரசு பாதுகாப்பு படைகளை அனுப்பி உதவ தயாராக உள்ளது. தமிழக அரசு கேட்காமல், மத்திய அரசு தானாக படைகளை அனுப்பாது என்று தெரிவித்தார்.
 
அதைத்தொடர்ந்து சட்ட ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது என்று ஆளுநர் வித்தியாசாகர் ராவ் தெரிவித்தார். இந்நிலையில்  தற்போது பெங்களூரிலிருந்து மாலை 4 மணிக்கு துணை ராணுவம் சென்னை வருகிறது என்று செய்தி வெளியாகியுள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments