Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதியை எதிர்த்துப் போட்டியிட்டால் சவுக்கு சங்கருக்கு ஆதரவு - சீமான்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (18:50 IST)
சவுக்கு சங்கர் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு ஆதரவு அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், யூட்யூப் பேட்டி ஒன்றில் பேசிய சவுக்கு சங்கர்  நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நீதிமன்றம் தானாகவே வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து மதுரை உயர்நீதிமன்றகிளை சவுக்கு சங்கருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளது.

சமீபத்தில் அவர் கடலூர் சிறையில் இருந்தபோது, அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததுடன்,  சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அரசு விடுதலை செய்ய வேண்டும் என   நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ALSO READ: சீமானை நேரில் சந்தித்த சவுக்கு சங்கர்!

இந்த நிலையில், இன்று, சீமானை  நேரில் சந்தித்துப் பேசினார், சவுக்கு சங்கர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், உதய நிதி ஸ்டாலினுக்கு எதிரான சவுக்கு சங்கர் போட்டியிடும் தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்ய மாட்டோம் என்றும் சவுக்கு சங்கருக்கு ஆதரவளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments