Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் எதிரொலி: விலை உயர்ந்த சன் டிவி பங்குகள்

Webdunia
செவ்வாய், 17 மே 2016 (15:50 IST)
தமிழகத்தில் நேற்று சட்டசபை தேர்தல் 232 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக ஆட்சியை கைப்பற்றும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறின. இந்நிலையில் மும்பை பங்கு சந்தையில் சன் டிவியின் பங்குகள் உயர்ந்தன.


 
 
இன்று வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையில் சன் டிவியின் பங்குகள் 10.75 சதவீதம் உயர்ந்து ரூ. 435.55க்கு விற்பனையானது. தேசிய சந்தையில் நிஃப்டியில் 10.39 சதவீதம் உயர்ந்து ரூ.435க்கு விற்பனையானது. சன் டிவியின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் 4.93 லட்சம் பங்குகள் கைமாறிய நிலையில், தேசிய சந்தையில் 4.7 லட்சம் பங்குகள் கைமாறின.
 
சன் டிவியின் உரிமையாளர்களாக கலாநிதிமாறன் மற்றும் தயாநிதி மாறன் உள்ளனர். இவர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்கள் மற்றும் தயாநிதிமாறன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளதால் அதன் எதிரொலி சன் டிவி பங்குகளின் உயர்வில் காணப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments