Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சை நடிகை சுஜிபாலா கடந்து வந்த பாதை!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (09:16 IST)
மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சுஜிபாலா.


 


இவர், அய்யா வழி, சந்திரமுகி, கலவரம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். மேலும், உண்மை என்ற படத்தில் நாயகியாகவும் நடித்திருகிறார்.


 


உண்மை என்ற படத்தில் இவர் நடிக்கும் போது, அப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாருடன் நெருக்கம் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்துக் கொண்டார், பின் அத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது.


 


இதை அடுத்து, சுஜிபாலாவுடன் நெருக்கமான புகைப்படங்களை ரவிக்குமார் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுதினார். மேலும், நடன கலைஞர் பூபதியுடன் சுஜாபாலா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியானது. இதன் பிறகு அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மீண்டு வந்தார்.


 


இந்நிலையில், அவர், ஊட்டியைச் சேர்ந்த பிரனேஷ் என்பவரை நேற்று  திடீரென்று திருமணம் செய்துக்கொண்டார். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது. சுஜிபாலாவின் சொந்த ஊரான நாகர்கோவிலில் இத்திருமணம் நடைபெற்றது. கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் சுஜிபாலாவின் குடும்பத்தினரும், நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.


 


பிரனேஷ், ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு கத்தார் நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இந்த திருமணத்தையொட்டி சுஜிபாலா கடந்த சில மாதங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாகவும், சுஜிபாலா என்ற பெயரை சுஜிதா என மாற்றி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments