Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைபேசி ஒட்டுகேட்பு புகார்; அமித்ஷா பதிலளிக்க வேண்டும்! – சுப்பிரமணியசாமி கருத்து!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (10:56 IST)
மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்ட விவகாரத்தில் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி கருத்து கூறியுள்ளார்.

மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரின் தொலைபேசி அழைப்புகளை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த புகார்களில் உண்மையில்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி “தொலைபேசி ஒட்டு கேட்பு புகார் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும். இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பா? இல்லையா? என்பது பற்றி விளக்கமளித்தால் நல்லது. இல்லாவிட்டால் அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல் போல இது தலைவலியாக மாறும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments