Webdunia - Bharat's app for daily news and videos

Install App

+2 மாணவர்கள் மடிக்கணினி பெற ஆதார் எண் அவசியம்: பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2015 (08:24 IST)
பிளஸ் 2 மாணவர்கள் மடிக்கணினி பெற ஆதார் எண் அவசியம் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 
அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா மடிக்கணினி வழங்குவதற்கு முன்பாக மாணவர்களிடம் ஆதார் எண் பெறப்படவேண்டும். 
 
பிளஸ் 2 சான்றிதழ் வழங்கும் போது மாணவ-மாணவிகளிடம் அவர்களுடைய ஆதார் எண் பெற்று உரிய பதிவேட்டில் குறித்துவைத்துக்கொள்ளவேண்டும்.
 
பெறப்பட்ட ஆதார் எண் விவரத்தை மடிக்கணினி வழங்க ஏதுவாக எல்காட் ஆன்லைனில் பதிவு செய்திட வேண்டும். அனைத்து மாவட்ட பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளின் ஆதார் எண் பெற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இது குறித்து அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் அறிக்கை அனுப்புங்கள். இவ்வாறு கண்ணப்பன் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments