புதுச்சேரி வரும் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (09:31 IST)
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குடியுரிமை சீர் திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் ஒரு படி மேலே போய் தனது ஆட்சியே பறி போனாலும் சரி, தனது உயிரே போனாலும் சரி குடியுரிமை திருத்த சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த விடமாட்டேன் என்று ஆவேசமாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள நாளை வருகை தர உள்ளார். இதனையடுத்து புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பட்டமளிப்பு விழா நடைபெறும் இடம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது 
 
இந்த நிலையில் நாளை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கலந்துகொள்ள இருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க போவதாக மாணவர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2008ஆம் ஆண்டு எலக்ட்ரானிக் மீடியா துறையில் தங்க பதக்கம் வென்ற கார்த்திகா என்ற மாணவியும் இந்த விழாவை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவில் எந்த கொம்பனா இருந்தாலும் வாங்க!.. சவால் விட்ட ஆ.ராசா!...

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஜய்!.. வேகமெடுக்கும் தவெக தேர்தல் பணி...

6 அமைச்சர் பதவி வேண்டும்!.., திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறதா காங்கிரஸ்?...

காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்த மான்.. பரிதாபமாக பலியான 4 வயது சிறுமி..!

இந்த தொகுதியெல்லாம் எங்களுக்கு வேணும்!.. அதிமுகவுக்கு செக் வைக்கும் பாஜக!...

அடுத்த கட்டுரையில்
Show comments