Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியையின் கன்னத்தில் பளார் விட்ட மாணவன்!

ஆசிரியையின் கன்னத்தில் பளார் விட்ட மாணவன்!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2016 (18:35 IST)
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒரு மாணவன் ஆசிரியை ஒருவரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் வணிகவியல் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மில் தொழிலாளியின் மகன்  ஒருவர் பாடத்தை நோட்டில் எழுதாமல் காகிதத்தில் எழுதிக்கொண்டிருந்தான்.
 
இதனால் ஆசிரியர் அந்த மாணவனிடம் கேட்டபோது அவன் நோட்டை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக கூறினான். இதற்கு மாணவனை ஆசிரியர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த மாணவன் ஆசிரியையின் கன்னத்தில் பளார் என்று இரண்டு முறை அறைந்துள்ளான்.
 
இந்த சம்பவம் தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகளிடன் கொண்டு செல்லப்பட்டது. கல்வி அதிகாரிகள் விசாரித்தபோது அந்த மாணவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
 
இதனால் மாணவன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி பள்ளியில் இருந்து நீக்கினார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments