Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை இருந்தும் அனாதையான குழந்தை… அநியாயமாக பலியான சிறுமி!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (16:09 IST)
கள்ளக்குறிச்சி அருகே சிறுமியின் குறும்புத்தணம் பொறுக்காமல் பெரியம்மா அடித்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்விழி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராணிக்கும் அவர் கணவருக்கும் பிரின்ஸி என்ற 5 வயது மகள் இருந்துள்ளார். சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் தந்தை வேறொரு திருமணம் செய்துகொண்டார். இதனால் சிறுமி தனது பெரியம்மா வளர்ப்பில் இருந்துள்ளார்.

சிறுமியை வளர்த்த பெண்ணுக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் சிறுமி செய்யும் குறும்புகள் சேட்டைகளால் அவர் அடிக்கடி கோபமாகி சிறுமியை அடிப்பது வழக்கம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல சிறுமி, சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்க கோபத்தில் அருகில் இருந்த கம்பை எடுத்து அடித்துள்ளார் அந்த பெண். இதில் அழுது அழுது சிறுமிக்கு மூச்சுத்திணறலே வந்துள்ளது. இதனால் மயக்கமடைந்த பிரின்ஸியை மருத்துவமனையில் சேர்க்க செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments