Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் ?- மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

Webdunia
வியாழன், 30 மே 2019 (14:26 IST)
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் நடக்க வாய்ப்பிருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இது குறித்த வழக்கு ஒன்றின் விசாரணையின் போது ‘தமிழகத்தில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாததற்கு நிலுவையில் உள்ள வழக்குகளேக் காரணம். மேலும் வார்டு மறுவரையறை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு எனப் பணிகள் முடியாமல் இருப்பதும் தேர்தல் நடத்துவதில் பிரச்சனையாக உள்ளன. . எனவே தற்போது தேர்தல் நடத்தும் சூழல் தமிழகத்தில் இல்லை. வாக்காளர் பட்டியலை சரிப்பார்த்த பின்னரே தேர்தல் நடத்தப்படும்’ எனத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது வாக்காளர் சரிபார்த்தல் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் ஜூலை 2வது வாரத்தில் முடிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments