இ-பதிவு இணையதளம் செயல்படத் தொடங்கியது!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (15:34 IST)
தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க இ-பாஸ் பதிவு செய்யும் இணையதளம் முடங்கியதையடுத்து மீண்டும் செயல்படத்துவங்கியுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் இ-பதிவு முறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு வேலைக்கு செல்லவும் இ-பதிவில் பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இ-பாஸ் பெற ஒரே சமயத்தில் பலர் விண்ணப்பிக்க முயற்சித்ததால் இ-பதிவு இணையதளம் முடங்கியது. இதனால் பலர் இ-பாஸ் பெறுவதில் சிக்கல் எழுந்தது. இது குறித்து அமைச்சர் மனோ.தங்கராஜ்,  
 
"ஒரே சமயத்தில் சுமார் 60 லட்சம் பேர் இ-பாஸ் விண்ணப்பிக்க உள்நுழைந்ததால் இ-பாஸ் இணையதளம் முடங்கியுள்ளது. பிரச்சினை சரிசெய்யப்பட்டு விரைவில் மீண்டும் இ – பாஸ் இணையதளம் செயல்படும்” என்றார். அதன்படி காலை முதல் முடங்கியிருந்த இ-பதிவு இணையதளம் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்த தாயின் சடலத்துடன் 20 நாட்கள் வாழ்ந்த வாலிபர்.. போலீசார் விசாரணையில் அதிர்ச்சி..!

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நாடாளுமன்றம் மக்களை காக்க தவறிவிட்டது.. வரி கட்டுபவர்களிடம் மன்னிப்பு கேட்ட எம்பி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பாராட்டிய திக்விஜய சிங்.. மறைமுக ஆதரவு கொடுத்த சசிதரூர்.. என்ன நடக்குது காங்கிரஸில்?

15 அடி ஆழத்தில் ரகசிய பாதாள அறை.. போலீசார் சோதனையின்போது தப்பிய போதைப்போருள் கடத்தல் மன்னன்..!

விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற நமல் ராஜபக்ச வாழ்த்து

அடுத்த கட்டுரையில்
Show comments