Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த முயற்சியில் தொழில் துவங்கினால் ...மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆலோசனை !

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (21:34 IST)
மாணாக்கர்கள் பயின்ற பிறகு பணிக்கு சென்றால் மாதாந்திர ஊதியம் மட்டுமே கிடைக்கும்.ஆனால் சொந்த முயற்சியில் தொழில் துவங்கினால் பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கலாம்.கரூரில் நடைபெற்ற சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மாணக்கர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
கரூரை அடுத்த தாந்தோனி பகுதியில் செயல்படும் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கூட்டரங்கில் தொழில் வணிகத்துறையின்  மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மைய  பொது மேலாளர் ரமேஷ்,துணை இயக்குனர் அருள்,கரூரில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கல்லூரியின் பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில்  பாரத பிரதமரின் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் குறித்து மாணக்கர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
 
மேலும்,மாவட்ட தொழில் மையம்  சார்பில் 34-பயனாளிகளுக்கு பல்வேறு தொழில் துவங்க ரூபாய் சுமார் 2-கோடியே 69-லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கி வாழ்த்தி பேசிய மாவட்ட ஆட்சியர் அன்பழகன்,உறவினர்களிடம் சென்று கடன் கேட்டால் கிடைக்காத இன்றைய கால கட்டத்தில் 5-முதல் 50-லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்க அரசாங்கம் முனைப்புடன் இருக்கிறது என்றும், கல்லூரி படிப்பை முடித்த மாணாக்கர்கள் பயின்ற பிறகு பணிக்கு சென்றால் மாதாந்திர ஊதியம் மட்டுமே கிடைக்கும்.ஆனால் சொந்த முயற்சியில் தொழில் துவங்கினால் பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கலாம் என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments