Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் ஜனாதிபதி ? திமுக பொருளாளரை கலாய்த்து எச்.ராஜா’ டுவீட்’

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (17:37 IST)
நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ல் துவங்கி  வரும் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  நம் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துரைமுருகன் கூறிதாவது:திமுக தலைவர்  ஸ்டாலினுக்கு இணையான தலைவர் தமிழகத்தில் இல்லை.மு.க. ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாகக்கூட வாய்ப்பு உள்ளவர் என்று தெரிவித்திருந்தார்.
 
துரைமுருகனின் இந்தக் கருத்துக்கு பாஜக தேசிய செயலர் ராஜா  கலாய்ப்பது போன்று இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்  ஒரு டுவீட்  பதிவிட்டுள்ளார்.
 
அதில், ''நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்சு அதிகம். ஆனால் அதற்காக இன்று  70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது  டூ மச்சா தெரியலை? என்று தெரிவித்துள்ளார். '' இந்தப் பதிவுக்குப் பலரும் லைக்குகள் அளித்துவருகிறார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

கிறிஸ்துமஸ் தினத்திலும் ஏவுகணை தாக்குதல்.. ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது..!

முதல்வர் அதிஷி போலி விரைவில் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments