Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்பதுரை…துன்பதுரை: ரைமிங்கில் கலாய்த்த ஸ்டாலின்

Arun Prasath
சனி, 5 அக்டோபர் 2019 (12:48 IST)
ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின், ராதாபுரத்தில் திமுக  தான் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.

ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வெளியிட அக்டோபர் 23 வரை தடை விதித்தது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பாக நின்ற அப்பாவு தான் வெற்றி பெறுவார் என்று கூறினார். பின்பு எம்.எல்.ஏ. இன்பதுரையை குறித்து பேசுகையில், மறுவாக்கு எண்ணிக்கையின் போது இன்பதுரை துன்பதுரையாகிவிட்டார் என கேலியாக கூறினார்.

முன்னதாக உயர் நீதிமன்றத்தின் மறுவாக்கு எண்ணிக்கைக்கான தீர்ப்பு வந்தபோது, இன்பதுரை அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை அளித்தார். அதன் பிறகு தபால் வாக்கு எண்ணிக்கை நிறைவேறிய பிறகு, மூன்று சுற்றுக்கான மின்னணு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், உச்ச நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைகான முடிவை அறிவிக்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments