Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியை கலைக்க சதி: அமைச்சர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆட்சியை கலைக்க சதி: அமைச்சர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (10:23 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் ஓபிஎஸ் முதல்வரானார். அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். ஆனால் இன்று வரை இந்த ஆட்சி நீடிக்குமா, கலைக்கப்படுமா என்ற குழப்பத்தில் அமைச்சர்கள் இருந்து வருகிறார்கள். மக்களுக்கும் அந்த சந்தேகம் இருந்து கொண்டுதான் வருகிறது.


 
 
இந்நிலையில் தற்போது ஆட்சியை கலைக்க திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிமுக தலைமையில் தற்போது நடந்து வரும் ஆட்சியை கலைக்க சதி செய்து வருவதாக அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
 
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நேற்று தொடங்கி வைத்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்த ஆட்சியை கவிழ்த்து, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அது உறுதியாக நடக்காது என்றார். மேலும் இதேபோல அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெறுவதாக கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments