Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் தான் என் அரசியல் வாரிசு: கருணாநிதி பரபரப்பு பேட்டி!

ஸ்டாலின் தான் என் அரசியல் வாரிசு: கருணாநிதி பரபரப்பு பேட்டி!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (09:51 IST)
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தான் என் அரசியல் வாரிசு என திமுக தலைவர் கருணாநிதி பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


 
 
அந்த பேட்டியில் சில கேள்விகளை எழுதி திமுக தலைவர் கருணாநிதி முன் வைத்தனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் கீழே உள்ளன.
 
கேள்வி: ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்ற பேச்சும் எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளதே. உங்கள் அரசியல் வாரிசு யார்?
 
பதில்: ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, திமுகவின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.
 
கேள்வி: ஸ்டாலின் செயல்பாட்டை எப்படிக் கணிக்கிறீர்கள்?
 
பதில்: தம்பி ஸ்டாலினின் செயல்பாடு, சிறப்பாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது. கட்சியினரையும் கட்சியையும் அவர் வழிநடத்திச் செல்லும் பாங்கு, மனதுக்கு மிகவும் நிறைவு தருவதாக உள்ளது.
 
கேள்வி: திமுகவில் மு.க.அழகிரி இல்லாததை, ஓர் இழப்பாக நீங்கள் கருதுகிறீர்களா?
 
பதில்: இருப்பதை எண்ணி மகிழ்ந்து, மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் நடைபோட வேண்டுமே தவிர, கழகத்தில் தற்போது இல்லாத யாரையும் நினைத்து, ஏங்கி நிற்பது பயணத்துக்குத் தடையாகிவிடும்.
 
இந்த பேட்டியில் திமுக தலைவர் கருணாநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், அழகிரியை பற்றி பேசுவதை தவிர்த்ததும் அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments