Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்! - 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!

Prasanth Karthick
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (09:23 IST)

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

அந்த அதிர்ச்சி மறைவதற்குள் கடற்கொள்ளையர்கள் கும்பல் அட்டூழியம் செய்துள்ளனர். வேதாரண்யம் அருகே கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர் கும்பல் தாக்கியுள்ளது.

 

மீனவர்களின் மீன்பிடி வலை, பொருட்கள் என சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றுள்ளனர். கடற்கொள்ளையர்கள் தாக்கியதால் காயமடைந்த மீனவர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments