Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோளாறு செய்த விமானம் – விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2015 (16:06 IST)
இல ங்கையிலிருந்து சென்னை வந்த விமானம் இன்று அதிகாலை தரையிறங்கும் போது விமானியின் சாமர்த்தியத்தால் அதில் பயணம் செய்த 105 பயணிகளும், ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து 105 பயணிகளுடன் விமானம் ஒன்று நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது விமானத்தின் சக்கரம் பழுது ஏற்பட்டிருப்பதை கண்டறிந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்தார்.

பின்னர் மிகவும் சாமர்த்தியமாக அந்த விமானத்தை தரையிறக்கினார். பழுதான சக்கரத்துடன் விமானத்தை விமானி தரையிறக்கி ஓடுபாதையிலேயே நிறுத்தினார். பின்னர் விமானத்தை அங்கிருந்து இழுத்து விமானம் நிற்கும் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அதில் இருந்த 105 பயணிகளும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.

விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உயிர் பிழைத்தனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments