Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி கைது

Webdunia
வியாழன், 11 செப்டம்பர் 2014 (11:27 IST)
சென்னையில் இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
 
சென்னையில் பாகிஸ்தான் உளவாளிகள் ஜாகீர்உசேன் உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியது. ஜாகீர் உசேன் இலங்கையை சேர்ந்தவர். மேலும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
 
முதலில் இந்த வழக்கை கியூ பிரிவு போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் மேலும் ஒருவரை நேற்று இரவு கைது செய்தனர்.
 
சென்னையில் கைது செய்யப்பட்ட அந்த உளவாளியின் பெயர் அருண் என்பதாகும். அவரும் இலங்கையை சேர்ந்தவர் தான். அவரை இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்த போவதாக தேசிய புலனாய்வு போலீசார் தெரிவித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரிடம் இருந்து 2 பாஸ்போர்ட்டுகள், லேப்–டாப் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments