Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதிக்கு பேச பயிற்சி அளித்து வருகிறோம். மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (20:47 IST)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு தற்போது பேட்டியளித்து வருகிறார்.



தமிழக அரசியலின் தற்போதைய நிலை, சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஜனநாயக படுகொலை ஆகியவை குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின், தனது தந்தையும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல்நிலை குறித்த தகவலையும் கூறினார்.

கருணாநிதியின் உடல்நலக் குறைவுக்கு காரணம் அவரது வயது முதிர்வுதான் என்றும், அவரது உடல்நிலை தற்போது படிப்படியான முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ட்ரக்யோஸ்டோபி செய்யப்பட்டுள்ளதால், பேசுவதில் சிக்கல் உள்ளதாகவும், அவர் பேசுவதற்காக ஸ்பீச் தெரஃபி என்கிற பேச்சுப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கருணாநிதி என்றாலே அவரது பேச்சாற்றல்தான் அனைவருக்கும் நினைவு வரும். அப்படிப்பட்டவர் வயது முதிர்வு காரணமாக பேச முடியாமல் உள்ளார். அவர் விரைவில் உடல்நலம் பெற்று தனது கம்பீர குரலில் பேச வேண்டும் என்று ஒவ்வொரு திமுக தொண்டனும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments