Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (05:29 IST)
சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
 

 
பேருந்து பயணத்தைவிட ரயில் பணயத்தையே அதிக அளவு மக்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் முக்கிய ரயில்கள் அனைத்திலும் கும்பல் குவிந்து வருகிறது. மேலும், காத்திருப்போர் பட்டியல் அதிக பேர் இடம் பிடித்துள்ளனர்.
 
இதில், குறிப்பாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் ரயில்களும், அங்கிருந்து சென்னை வரும் ரயில்களில் அதிக அளவு மக்கள் பயணம் செய்கின்றனர். இதனால், அந்த ரயில்களில் இடம் கிடைக்காமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.
 
இதனை கருத்தில் கொண்டு, சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து டிசம்பர் 11 ஆம் தேதி மற்றும் 18 ஆம் தேதி அன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
 
அதே போன்று டிசம்பர் 13 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதி அன்று நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது.
 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments