Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (12:18 IST)
சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

கடந்த சில நாட்களாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் நாளை அதாவது அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளின் போதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அக்டோபர் 8,  அக்டோபர் 13, அக்டோபர் 18, அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 27 ஆகிய ஐந்து நாட்களிலும் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஏற்கனவே உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் மெட்ரோ ரயில் கூடுதலாக ரயில்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கிரிக்கெட் ரசிகர்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்க இருப்பதால்  போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு பெரும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments