ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் பக்தர்களின் வசதியை முன்னிட்டு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை முதல் ஜூலை 25ஆம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் குறித்த முழு தகவல்கள் இதோ
பயணிகள் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 43407/43418) அரக்கோணத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு திருத்தணி வந்தடையும். மீண்டும் இந்த ரெயில் திருத்தணியில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு, காலை 11.08 மணிக்கு அரக்கோணம் வந்தடையும்.
பயணிகள் சிறப்பு ரெயில்(43413/43422) அரக்கோணத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திருத்தணி வந்தடையும். மீண்டும் இந்த ரெயில் திருத்தணியில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.48 மணிக்கு அரக்கோணம் வந்தடையும்.
பயணிகள் சிறப்பு ரெயில்(43415/43426) அரக்கோணத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 3.10 மணிக்கு திருத்தணி வந்தடையும். மீண்டும் இந்த ரெயில் திருத்தணியில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு, மதியம் 3.38 மணிக்கு அரக்கோணம் வந்தடையும்.