Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசார்ட்டில் தங்கி சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏக்களுக்காக பிள்ளையாரிடம் பிரார்த்தனை

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (05:36 IST)
தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டிலும், புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தில் உள்ள ரிசார்ட்டுகளுக்கும் சென்று ஓய்வு எடுத்து வருவதாகவும், மக்கள் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இவ்வாறு ஓய்வு எடுத்து வரும் எம்.எல்.ஏக்களுக்கு நூதன பிரார்த்தனை ஒன்றை செய்துள்ளதகவும், பா.ம.க, காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர்.



 
 
ஏற்கனவே இருமடங்கு சம்பள உயர்வு பெற்றுள்ள எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் ஊர் ஊராக ரிசார்ட்டில் சுற்றி வருகின்றனர். எனவே அவர்களுக்கு இன்னும் அதிகமாக சம்பளம் கொடுத்தால் வெளிநாட்டிலும் சுற்றலாம், எனவே எம்.எல்.ஏக்களுக்கு இன்னும் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்று கோவில்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவிலில் இந்த எம்.எல்.ஏக்கல் பிரார்த்தனை செய்தார்களாம்
 
கடனில் தத்தளிக்கும் தமிழகம் நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுடன் இருக்கும் நிலையில் பொறுப்பில்லாமல் ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கவும், பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டதாக பா.ம.க, காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments