Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார இறுதி மட்டும் முகூர்த்த நாள்: சென்னையில் இருந்து 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

Siva
வியாழன், 30 மே 2024 (08:11 IST)
வார இறுதி மற்றும் முகூர்த்த நாள் வருவதை அடுத்து சென்னையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது போலவே வார இறுதி நாட்களிலும் முகூர்த்த நாட்களிலும் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை இயக்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இந்த வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாள் சேர்ந்து வருவதை அடுத்து சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 
 
மே 31ஆம் தேதி 500 பேருந்துகளும் ஜூன் ஒன்றாம் தேதி 570 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பேருந்துகளில் முன் பதிவு செய்ய விரும்பும் பயணிகள் போக்குவரத்து துறையின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments