Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள தங்கக்கடத்தல் விவகாரம்: தகவல் தொடர்பு துறை செயலாளர் சஸ்பெண்ட்

கேரள தங்கக்கடத்தல் விவகாரம்: தகவல் தொடர்பு துறை செயலாளர் சஸ்பெண்ட்
Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (19:42 IST)
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்வப்னா சமீபத்தில் பெங்களூரில் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
திருவனந்தபுரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை செய்தபோது 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர் என்பதும், இந்த கடத்தலுக்கு முதல்வர் பினராய் விஜயனுக்கு நெருக்கமான தொடர்பில் இருக்கும் ஸ்வப்னாவுக்கு தொடர்பு உண்டு என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா தேசிய புலனாய்வு ஆணையத்தின் அதிகாரிகளால் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். அவருடன் சந்தீப் என்பவரும் அவருடைய நண்பரும் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என சற்றுமுன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடைபெறும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments