Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரை விவாகரத்து செய்வது உண்மைதான் - பாடகி சுசித்ரா விளக்கம்

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (15:45 IST)
நாடக நடிகரும், தன்னுடைய கணவருமான கார்த்திக் குமாரை விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக பாடகி சுசித்ரா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
கடந்த நில நாட்களாக, பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவு செய்து வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் மிகுந்த பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் எனக்கூறி, சின்னத்திரை டிடி, தனுஷ், ஹன்சிகா, அனிருத், ஆண்ட்ரியா ஆகியோரின் நெருக்கமான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார். இந்த சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்கானது. தமிழ் சினிமா உலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
ஆனால், தன்னுடைய டிவிட்டர் 2 வாரங்களுக்கு முன்பே யாரோ ஒருவரால் ஹேக் செய்யப்பட்டு விட்டது எனவும், அதிலிருந்து வெளியாகும் தகவல்களுக்கு தான் பொறுப்பில்லை எனவும் சுசித்ரா விளக்கம் அளித்துள்ளார். 
 
இதுபற்றி செய்தியாளர் ஒருவரிடம் கருத்து தெரிவித்த அவர் “ என்னுயை டிவிட்ட கணக்கை யாரே ஹேக் செய்துள்ளனர். எனவே, இதுபற்றி டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் புகார் கொடுத்துவிட்டு, எனது டிவிட்டர் கணக்கை அழித்து விட்டேன். எனவே, தற்போது எனது பெயரில் உள்ள டிவிட்டர் பக்கத்தில் வெளியாகும் புகைப்படங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடம் யாருடையை புகைப்படமும் இல்லை. இதுபற்றி போலீசாரிடம் புகார் அளிக்க இருக்கிறேன்.
 
நானும், எனது கணவர் கார்த்திக்கும் விவாகரத்து செய்யப்போவது உண்மைதான். இருவரும் ஒருமித்த மனதுடம் பிரிய உள்ளோம். அதுபற்றி விரைவில் தெரிய வரும்” என அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 24 பேர் கவலைக்கிடம்..! தமிழக அரசு அதிர்ச்சி தகவல்..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்...!!

மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லையா? தங்கர்பச்சான்

வெறும் தேர்தல் அரசியல் நடத்தும் திமுக..! முதல்வர் ஏன் வரவில்லை.? பிரேமலதா சரமாரி கேள்வி..!!

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments