Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்து மீது பாலியல் புகார்: பெண் பத்திரிகையாளரின் டுவீட்டால் பரபரப்பு

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (19:39 IST)
திரையுலகமே கவியரசு வைரமுத்து மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வைரமுத்து மீது பாலியல் புகார் குறித்த டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறி தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற கவிஞர் வைரமுத்து மீது சந்தியாமேனன் என்ற பெண் பத்திரிகையாளர் தனக்கு வைரமுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டுவீட் செய்துள்ளார். தான் இளவயதில் வைரமுத்துவுடன் பணியாற்றியபோது அவர் மீதும் அவருடைய எழுத்தின்மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்ததாகவும், ஆனால் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் அதிர்ச்சி அடைந்ததாகவும் அந்த டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார். அந்த டுவீட்டை அவர் சில நிமிடங்களில் டெலிட் செய்துவிட்டாலும் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தவர்கள் வைரலாக்கி வருவதால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது.

மேலும் இந்த டுவீட்டை பாடகி சின்மயி ரீடுவீட் செய்துள்ளார். இந்த தகவலை ஒருசிலர் நம்பவில்லை எனினும் இது நடந்தது உண்மை என சின்மயி, அந்த பெண் பத்திரிகையாளருக்கு ஆதரவு கொடுத்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்மீதான குற்றச்சாட்டுக்கு வைரமுத்து என்ன பதில் கூறப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது அரசுப் பள்ளிச் சிறுமிக்கு ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை: அண்ணாமலை கண்டனம்..!

ஆன்லைனில் புக் செய்தால் போதும்.. ஷோரூமில் இருந்து வீட்டுக்கே வரும் கார்.. புதிய வசதி..!

பழனிமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்