Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது கொரோனாவைப் பற்றி சிலப்பதிகாரத்தில் இருக்கிறதா? – வைரலாகும் வாட்ஸ் ஆப் பதிவு !

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (08:12 IST)
சமீபகாலமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் பேசப்பட்டுள்ளதாக ஒரு வாட்ஸ் ஆப் பதிவு வைரலாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.

 
கொரோனா வைரஸ் என்ற பெயரை இன்று அறியாதவர்கள் இந்த உலகத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இந்த வைரஸுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தவித்துக் கொண்டிருக்க, ஆயுர்வேதத்தில் இருக்கிறது சித்தாவில் இருக்கிறது என குரூப் சுற்றிக் கொண்டு இருக்க, இப்போது சிலப்பதிகாரத்திலேயே இது பற்றி பேசப்பட்டுள்ளதாக ஒரு மெஸேஜ் உலாவிக் கொண்டு இருக்கிறது.

சிலப்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயத்தில், மூன்றாவது பந்தியில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் கேட்கும் கேள்வி..

"தட்டையான் மூக்குடையான்
வெட்டுவான் விடமாவான்
கட்டுடல் மேனியவன்
காயமற்று வீற்றிருக்க
மற்றவன் கொற்றவன்
வித்துடல் ஆகி நிற்க
சாசில்லை மேசில்லை
கோரானான் வை ராசா
என் செய்வாய் என் ராசா?"
இதன் அர்த்தம்

"தட்டை மூக்குடையவன்(சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான். அப்போது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை, மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் அது கொரோனா வைரசே. அப்போது நீ என்ன செய்ய முடியும் மன்னனே?"
இப்போது பரவும் நோயை ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே கண்டுபிடித்து எச்சரித்த நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
உண்மைத் தமிழனாக இருந்தால் பகிரவும்.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments