Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிய மனு தாக்கல்.. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு..!

Mahendran
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (14:27 IST)
பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று  எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்ற நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த மனுவில் வங்கி சார்பில், அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படும் வரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த நிலையில் பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கவில்லை. மேலும் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை ஜூன் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக செந்தில் பாலாஜி வழக்கில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு  வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு மீது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று சென்னை  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments