வாக்காளர் திருத்தப் பட்டியலில் முறைகேடு? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (18:25 IST)
தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பட்டியலில் முறைகேடு என திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து சமீபத்தில் வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
 
மேலும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பதை உறுதி செய்யவும் வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் அவகாசம் கொடுக்கப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். இந்த வழக்கில் தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் முறைகேடு என அவர் கூறியுள்ளார். மேலும் கரூர் மாவட்டத்தில் திடீரென 30,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் செந்தில்பாலாஜி தனது மனுவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments