Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சிக்கும் நீட் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. செல்வப்பெருந்தகை

Mahendran
செவ்வாய், 11 ஜூன் 2024 (19:05 IST)
காங்கிரஸ்-க்கும் நீட் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக தான் என்றும்,  காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்
 
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அதில் அவர் பேசியபோது காங்கிரஸ்-க்கும் நீட் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக தான் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
நீட் தேர்வு என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை என்றும், நீட் தேர்விற்கு முதலமைச்சர்  தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார். 
 
இந்த நிலையில் நீட் தேர்வு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார் என்று நெட்டிசன்கள் செல்வப்பெருந்தகை பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்   
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேனியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு! - மேலும் 5 சிறுவர்கள் சிகிச்சையில்..!

சென்னை மழையில் மக்கள் தத்தளிப்பு: பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திமுக! - ஓபிஎஸ் விமர்சனம்!

ஏரியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவை தூவியதாக குற்றசாட்டு: நடவடிக்கை எடுக்கப்படும் என -அமைச்சர் தாமோ.அன்பரசன் பதில்!

தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்....

திருப்பதியில் விடிய விடிய மழை: ஏழுமலையான் கோயில் முன்பு வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments