Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி கிடைத்தால் ஒரே நாளில் சுங்கச் சாவடிகளை இடிப்பேன்… சீமான் பேச்சு!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (09:26 IST)
தன்னிடம் ஆட்சி கிடைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் ஜேசிபி எந்திரம் கொண்டு இடித்துவிடுவேன் எனக் கூறியுள்ளார் சீமான்.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் திடீரென தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. 

ஆம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் ஒன்றாம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் ரூ.5 முதல் ரூ.35 வரை உயர்ந்துள்ளது. ஒரு முறை செல்லும் இலகுரக வாகனங்களுக்கு ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.55 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் உள்ளவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘என்னிடம் மட்டும் ஆட்சி கிடைத்தால் ஒரே நாள் இரவில் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை எல்லாம் ஜேசிபி எந்திரம் கொண்டு இடித்து தள்ளிவிடுவேன்’ என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! மீனவர்களுக்கு தடை! பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடல்பகுதி!

டாக்டர், நர்சு, மருத்துவ பணியாளர் பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்! - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முக்கிய மாற்றம்: பயணிகளுக்கான புதிய வசதி

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments