Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் பிறந்தநாள்...கமல், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (19:55 IST)
தமிழ் சினிமாவில் பாஞ்சாலங்குறிச்சி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் சீமான். அதன்பின், இனியவளே, வீர நடை, தம்பி, வாழ்த்துகள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

அமைதிப்பபடை, ஆடும்கூத்து பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களில் நடிகராக நடித்துள்ளார்.
இவர், தினத்தந்தி  நாளிதழின் நிறுவரும் தமிழர் தந்தையுமான சி.பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியை வழி நடத்தி வருகிறார்.

இதுவரை நடந்த தேர்தல்களில் இக்கட்சி தோல்வியைச் சந்தித்தாலும், குறிப்பிட்டளவு வாக்கு சதவீதத்தை இக்கட்சி பெற்றுள்ளது.

ALSO READ: நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க வேண்டும்- சீமான்
 

இன்று இவரது 55 வது பிறந்த நாளையொட்டி, பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள்  பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், ஆற்றல் மிகு பேச்சாலும், அளப்பரிய தமிழுணர்வாலும் அனைவரையும் ஈர்க்கும் அன்புத் தம்பி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் @SeemanOfficial அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மா நில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு @SeemanOfficial அவர்களின்  பிறந்தநாளான இன்று, அவர் அனைத்து நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ @BJP4TamilNadu சார்பாக மனமார வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்ல் இன்று பிறந்தநாள் காணும் அன்பு இளவல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  @SeemanOfficial அவர்களுக்கு விசிக சார்பில் எமது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களுக்கான அவரது அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்துகள் #VCK #NTK’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments