Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயிலும் சாமியும் ஓடிவிடாது: பாஜகவை சீண்டும் சீமான்?

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (10:42 IST)
வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  பேட்டியளித்துள்ளார்.
 
தமிழகத்தில் கொரோனா காராணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோவில்கள் திறக்கப்பட்டிருந்தாலும் வார இறுதிகளான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மூடப்பட்டுள்ளது. மேலும் திருவிழாக்களும் நடத்த தடை உள்ளது. 
 
இந்நிலையில் கோவிலை முழுவதுமாக திறக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் சமீபத்தில் போராட்டங்கள் நடைபெற்றது. ராமநாதபுரம், நாமக்கல், மதுரை, தஞ்சாவூர், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். 
இதனிடையே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, வழிபாட்டுத் தலங்களைத் திறந்தபோது மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை. எனவேதான் கொரோனா பரவலை தடுக்க வழிபாட்டுத் தலங்களில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 
 
கோயிலும் அங்கேதான் இருக்கும், சாமியும் அங்கேதான் இருப்பார். கொரோனா குறைந்த பின் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாமே, திடீரென கொரோனா பரவினால் அரசை குறை சொல்வதற்கா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments