Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2015 (15:07 IST)
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் சென்னை, அம்பத்தூரில் நடந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதில் பங்கேற்று பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது:–
 
தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தலைவன் பிரபாகரன். பெற்ற பிள்ளைகளுக்கு எல்லாம் பதவி கொடுத்து, கடைசி வரை பதவியைத் தேடிய தலைவர்களுக்கு மத்தியில், தான் பெற்றெடுத்த பிள்ளைகளை களத்தில் பலிகொடுத்த தலைவர்தான், பிரபாகரன்.
 
50 ஆண்டுகால திமுக ஆட்சியில் என்ன மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது? திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் பசி, பஞ்சம், பட்டினி, வறுமை, ஏழ்மை தான் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜகவுக்கு நாமே மாற்று நாம் தமிழரே மாற்று.
 
வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவது என்று முடிவெடுத்து நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது.
 
இந்த போட்டி என்பது தோற்பதற்கல்ல தொடங்குவதற்கு மே 24, திருச்சியில் இன எழுச்சி மாநாட்டை நாம் தமிழர் கட்சி நடத்துகிறது. ஒவ்வொரு தமிழரும் பங்கேற்க வேண்டும் என்று சீமான் பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

Show comments