இது வேற லெவல் அந்தர் பல்டி... வாட் இஸ் திஸ் மிஸ்டர் சீமான்?

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (14:13 IST)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. 
 
சீமான், சமீபத்தி ரஜினி மற்றும் விஜய்யை ஒப்பிட்டு பேசி வருகிறார். அதோடு ரஜினி இன்னும் 4 படங்கள்தான் நடிப்பார் என்றும் இனி என் தம்பி விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இதே சீமாந்தான் சர்கார் திரைப்படம் வெளியான போது, விஜய் முதல்வரிடம் தாழ்ந்ந்து சென்றது சரியானது அல்ல. சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் என தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரை சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருந்தேன் எனக் கூறுவது எல்லாம் அவமானம். 
எடப்பாடிக்கெ எல்லாமா பயப்படுவது. உன் மேல் நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. நீயெல்லாம் என் தம்பியா? இதில் ஒரு விரல் புரட்சியாம். தமிழ்நாட்டின் உண்மையான சூப்பர் ஸ்டாராக எனது தம்பி சிம்புதான் வருவான் என கூறினார்.
 
இப்போது இது இரண்டையும் பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் சீமானை கலாய்த்து வருகின்றனர். சீமானின் இந்த பேச்சுக்கு காமெடி நடிகர் வடிலேலுவின் அது வேற வாய், இது நாரவாய் என்ற டயலாக் பொருந்தும் என்றும் கேலி செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments