Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கள்ளக்காதலிக்கு ஒரு கள்ளக்காதலன்’ - மதுபோதையில் பெண் வெட்டிக் கொலை

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (09:32 IST)
கள்ளக்காதல் தகராறில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அந்த பெண்ணின் அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.
 

 
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஞானசேகர் (48), தனது மனைவி சரளா மற்றும் இரு குழந்தைகளுடன், வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டினருகே சரளாவின் தங்கை பாலாமணி (38), தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடனும் வசித்து வந்துள்ளார்.
 
பாலாமணியின் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், பாலாமணியின் கணவர் பிரிந்து சென்று விட்டார். இதன் பிறகு மனைவியின் தங்கை பாலாமணி தனது அக்காள் வீட்டிலேயே தங்கி உள்ளார். அப்போது அக்காள் கணவர் ஞானசேகருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
 
இதனையடுத்து, பாலாமணியை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே தனியாக தங்க வைத்துள்ளார். மேலும், அவருக்கு அதே பகுதியில் மளிகைக்கடையும் வைத்து கொடுத்துள்ளார். மளிகைக்கடையில் இருந்த பாலாமணிக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
 
அந்த வாலிபருடன் பாலாமணி அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இது ஞானசேகருக்கு தெரியவந்தது. அவர் பாலாமணியை கண்டித்தார். ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து வாலிபருடன் பாலாமணி பேசிவந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஞானசேகர் பாலாமணியுடன் தங்கி இரவில் இருவரும் மது அருந்தியுள்ளனர். குடிபோதையில் ஞானசேகர் வேறுவாலிபருடன் தொடர்பு குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இதனால் ஆத்திரம் அடைந்த ஞானசேகர் பாலாமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் பாலாமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஞானசேகரனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments