Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவியல் பாட தேர்வு வினாத்தாள் மிகவும் கடினம்.. 10ஆம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி..!

Siva
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (08:15 IST)
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற அறிவியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர்

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்பாராத பல வினாக்கள் வினாத்தாளில் இருந்ததாகவும் வழக்கமாக இடம்பெறும் கேள்விகள் 25 சதவீதம் கூட வினாத்தாளில் இல்லை என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்

ஆசிரியர்கள் கூறிய முக்கியமான கேள்விகள் ஒன்று கூட வரவில்லை என்றும் ஒரு மதிப்பெண் கேள்விகள் கூட புதிய வடிவில் வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததாகவும் அதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட பதில் அளிக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த முறை அறிவியல் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என்று ஆசிரியர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மற்ற பாடங்களை ஒப்பிடும்போது அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக ஆசிரியர்களே கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments