வகுப்பறைகளை தயார் செய்யும் ஆசிரியர்கள்! விரைவில் பள்ளிகள் திறப்பு?

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:56 IST)
இன்று முதல் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ள நிலையில் வகுப்பறைகளை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வரும் நிலையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடந்து வந்தன. இந்நிலையில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க பள்ளிகளை திறப்பது அவசியம் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் வகுப்பறைகளை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதனால் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் முதற்கட்டமாக பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு!. 50க்கும் மேற்பட்டோர் பலி!..

ஒரே நாளில் 10 ஆயிரம் விருப்ப மனுக்கள்!.. சி.டி.நிர்மல் குமார் பேட்டி...

உபேர், ஓலா, ரேபிடோ ஓட்டுனர்கள் நாளை ஸ்டிரைக்!..

பிப்ரவரி 20ல் டாடா வெளியிடும் Punch EV காரின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு.. என்னென்ன சிறப்புகள்..

தொழுகை முடிந்ததும் தற்கொலைப்படை தாக்குதல்.. பாகிஸ்தானில் 25 பேர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments