Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (17:08 IST)
சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிசம்பர் 8) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை வரலாற்றில் கடந்த 47 ஆண்டுகளில்  இல்லாத அளவு மழை பெய்துள்ளதால் ஏற்பட்ட வெள்ளத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் அரசுடன் இணைந்து பல்வேறு  உதவிகள் செய்து வருகின்றனர்.

சென்னை வெள்ளத்தில் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்படுத்த தொடங்கிய 4 ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிசம்பர் 8) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments