Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த என்ஜினியரிங் மாணவர்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (14:13 IST)
சேலம் அருகே என்ஜினியரிங் மாணவர் ஒருவர் 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.


 

 
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆருகே உள்ள கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்த புஷ்பா என்பவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி விரகனூர் ஏரி கரையில் வேலை செய்யும் தன் தாயை பார்க்க சென்றுள்ளார்.
 
அப்போது விக்னேஷ்(18) என்ற என்ஜினியரிங் பயிலும் மாணவன், புஷ்பாவை பின் தொடர்ந்து சென்று, வலுக்கட்டாயமாக யாரும் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு வைத்து புஷ்பாவை வன்கொடுமை செய்ய முயற்சித்த போது அவர் முரடு பிடித்துள்ளார். 
 
இதனால் புஷ்பாவை கயிற்றால் கட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் புஷ்பாவுக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. மேலும் அவர் மயக்கமடைந்தார். இதனால் விக்னேஷ் பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டார்.
 
புஷ்பாவை வெகு நேரமாக காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் தேடிப்பார்த்து பின்னர் கண்டுபிடித்தனர். புஷ்பாவிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை கூறினார்.
 
இதையடுத்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின்னர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் விஷம் அருந்துயது தெரியவந்தது.
 
இதையடுத்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிக்கிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

ஒரு மணி நேரத்துக்கு மேல ஃபோன் பாத்தா கண்ணு காலி..?! - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்