Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (19:32 IST)
வர்தா புயல் தீவிரமடைந்துள்ளதால் நாளை சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதானால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விருமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 

 
வர்தா புயல் நாளை ஆந்திரா, சென்னை இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பலந்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தேசிய, மாநில மீட்புகுழுவினர் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முப்படை தேவைகள் பயன்படும் போது பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோரப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
புயல் தொடர்பான பணிகளை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிரியாவில் திடீரென தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம்.. 37 பயங்கரவாதிகள் பலி..!

திடீரென மயங்கி விழுந்த கார்கே.. தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி..!

இன்று காலை 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அரசியல் என்பது குடும்பங்களை மையமாக கொண்டு இயங்குகிறது: கார்த்தி சிதம்பரம்..!

அருணாச்சல பிரதேசத்தில் யாரும் செல்லாத மலைச்சிகரம்: தலாய் லாமா பெயர் வைக்க சீனா எதிர்ப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments