Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் விடிய விடிய மழை.. 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிப்பு..!

Siva
புதன், 13 நவம்பர் 2024 (07:03 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில், இரண்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றியுள்ளது. அடுத்து, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதைக் கண்டு வருகிறோம். மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு சென்னை உள்பட சில மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் மேலும் சில மாவட்டங்களில் மழை பெய்துவருவதால், பள்ளி, கல்லூரி குறித்த அறிவிப்புகள் சில மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பொறுத்தவரை இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சீர்காழியில் 14 சென்டிமீட்டர் மழை பெய்ததாகவும், இதன் காரணமாகத்தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments