Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரியில் பௌர்ணமி வழிபாடு; பக்தர்களுக்கு அனுமதி!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (10:24 IST)
சதுரகிரியில் சிவராத்திரி மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.

கடந்த மாதம் மழை காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த மாதம் தற்போது சிவராத்திரி மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக நேற்று முதல் டிசம்பர் 8ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காலை 6 மணிக்கே மலையேற அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments