Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் மரணத்தை திசை திருப்பவே சசிகுமார் படுகொலை: தமிழச்சி தடாலடி!

ராம்குமார் மரணத்தை திசை திருப்பவே சசிகுமார் படுகொலை: தமிழச்சி தடாலடி!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (12:39 IST)
சுவாதி கொலைவழக்கில் கைதான ராம்குமாரை மீட்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பல்வேறு சந்தேகங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் பொதுமக்களை சிந்திக்க வைத்தவர் பிரான்சில் இருக்கும் தமிழச்சி.


 
 
இந்நிலையில் சிறையில் இருந்த ராம்குமார் மர்மமான முறையில் இறந்துவிட்டார். இந்த மரணம் கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் இன்னமும் தீரவில்லை. ராம்குமாரின் இந்த சந்தேக மரணத்தை திசை திருப்பவே கோவையில் இந்த முன்னணி உறுப்பினர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார் என தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்தான அவரது பதிவில், ராம்குமார் படுகொலையில் இருந்து மக்களை திசைமாற்றம் செய்யவே கோவையில் இந்து முன்னணி உறுப்பினர் சசிகுமார் படுகொலையை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். அதன் தொடர்ச்சியாய் மீண்டும் இஸ்லாமியர் மீது பொய் குற்றச்சாட்டை முன்வைத்து கலவரத்தை நடத்தியது என கூறியுள்ளார்.
 
சுவாதி கொலை, ராம்குமார் மரணம் என தமிழகத்தின் ஒரு பரபரப்பான வழக்கில் ஃபேஸ்புக் மூலம் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தமிழச்சி தற்போது சசிகுமார் படுகொலை வழக்கிலும் பதிவிட ஆரம்பித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments