Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவை தனியே விட்டுவிட்டு சசிகலா எங்கே போனார்? எப்பொழுது மருத்துவமனை திரும்பினார்?

ஜெயலலிதாவை தனியே விட்டுவிட்டு சசிகலா எங்கே போனார்? எப்பொழுது மருத்துவமனை திரும்பினார்?

ஜெயலலிதாவை தனியே விட்டுவிட்டு சசிகலா எங்கே போனார்? எப்பொழுது மருத்துவமனை திரும்பினார்?
, சனி, 1 அக்டோபர் 2016 (09:03 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தான் தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தலைப்பு செய்தி. தமிழகமே காத்திருக்கிறது முதல்வரின் வருகைக்கு.


 
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறார் அவரின் தோழி சசிகலா. மருத்துவமனையை விட்டு வெளியே வராத அவர் நேற்று முன்தினம் முதல்முறையாக இரவு 9.30 மணிக்கு வெளியே வந்தார்.
 
இதனால் மருத்துவமனை வளாகமே பரபரப்பானது. மிகவும் எளிமையாக வெளியே வந்த சசிகலா சிகப்பு கலர் காரில் ஏறி சென்றார். முதல்வர் எப்படி இருக்கிறார் என்பதை கேட்க மருத்துவமனை முன்பு ஏறாளமானோர் இருந்தனர். அவர் எங்கு செல்கிறார். எப்பொழுது திரும்பி வருவார் என்பதை அறியாத பலர் அவர் திரும்பி வரும் போது முதல்வரை பற்றி கேட்கலாம் என அங்கேயே காத்திருந்தனர்.
 
வெளியே சென்ற அவர் நேராக போயஸ் கார்டன் சென்றுள்ளார். அங்கு எதற்காக சென்றார் என்பது தெரியவில்லை. இரவு முழுக்க அவர் மருத்துவமனை திரும்பவில்லை. மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு தான் அவர் அப்பல்லோவிற்கு வந்துள்ளார்.
 
திரும்பி வந்த சசிகலா கையில் சில ஆவணங்களை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. முதல்வரின் உடல்நிலையால் சசிகலா மிகவும் சோர்வடைந்துள்ளதாகவும், மிகவும் உறசாகம் இழந்தும் காணப்படுகிறார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சென்னை 28 இரண்டாம் பாகம்’ - ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!