Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை தன் பிடியில் வைத்திருந்தார் சசிகலா: அம்ருதா பரபரப்பு குற்றச்சாட்டு!

ஜெயலலிதாவை தன் பிடியில் வைத்திருந்தார் சசிகலா: அம்ருதா பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (17:02 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்த போது ஆளுநர் உட்பட யாரையும் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை சசிகலா. ஜெயலலிதாவின் இரத்த உறவுகளை கூட மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை.


 
 
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை கடைசி வரை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை சசிகலா. இதனால் ஜெயலலிதாவின் மர்ணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் சசிகலா குறித்து ஜெயலலிதாவின் தங்கை மகள் அம்ருதா கர்நாடகா ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ஜெயலலிதா அம்மாவை சசிகலா மிரட்டி தன்னுடன் வைத்திருந்தார். அது ஏதோ தனிப்பட்ட காரணமாக இருக்கலாம்.
 
அம்மா எங்களுடன் இணைந்திருக்க சசிகலா அனுமதிக்கவில்லை. சசிகலா ஏதோ சிலவற்றை தெரிந்துவைத்துக்கொண்டு அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இப்பொழுதும் அவர் தான் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகத்தை சார்ந்தாவர் என்பதால் அவரை முதலமைச்சராக வைத்துள்ளார் சசிகலா.
 
மக்கள் சசிகலாவை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதும், மதிப்பளித்ததும் ஜெயலலிதா அம்மாவை மட்டும் தான். சசிகலா எப்படிப்பட்ட கிரிமினல் என்பது மக்களுக்கு தெரியும். எனக்கு மூன்று முறை அம்மாவை சந்திக்க வாய்ப்பு கொடுத்த சசிகலா அவற்றை அம்மாவுக்கு உடல் நலம் சரி இல்லை என மறுத்திருக்கிறார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments